பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

சங்கர் அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு இரும்புப் பெட்டியின் முன் உட்கார்ந்தான். எப் படியோ ஒன்றை மாற்றி ஒன்று போட்டுப் பார்த்த: தில் பெட்டி திறந்து கொண்டு விட்டது.

பட்டாமணியம் கூறியது போலவே, பாங்க் புஸ்

தகப்பை முன்னாடியே இருந்தது. ஆனால் அந்தப் பெட்டியினுள் தெரிந்த வேலைப்பாடும்; அதன்

ரகசிய அறைகளும் சங்கரை மேன்மேலும் ஆராய்ந்து பார்க்கத் துண்டின.

யானையின் தும்பிக்கை போன்றிருந்த ஒன்றை உயர்த்தினான். அதில் ஒருசாவித்துவாரம் இருந்தது. கஜலகஷ்மி அமர்ந்திருந்த தாமரையைச் சற்றுத் தள்ளினான். அதிலே இன்னொரு அறைக்கான திறப்புத் தெரிந்தது.

எல்லாவற்றுக்கும் கடைசியாக அந்த இரும்புப் பெட்டியிலிருந்த கள்ள அறையைத்திறந்து பார்த்த போது சங்கரின் உடம்பு பயத்தினால் நடுங்கிப் போய் விட்டது.

உள்ளே காணப்பட்ட பொருள்கள் அவனது பயத்தை மீண்டும் தூண்டுவனவாக இருக்கவே சங்கர் சட்டென்று அந்த அறையைச் சாத்திப் பூட்டி விட்டான்.