பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘97

புரிஞ்சுக்க முடியாமத்தான் நானும் ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஏ மா ந் து க் கி ட் டே இருக்கேன். இல்லேன்னா நீங்க லாயக்கில்லைன்னு ஒதுக்கின கன்னுக்குட்டியைத் தெரியாமெ விலைகொடுத்து வாங்கி ரேக்ளாவிலே பூட்டி கால் ஒடிஞ்சு இங்கே வந்து விழுந்து கிடப்பேனா???

பட்ட மணியத்தின் இந்தப் பேச்சைக் கேட்ட தும், சந்தானத்துக்குச் சுருக்கென்று மனத்தில் தைத்தது. இத்தனை நேரம் தம்மிடம் ஏதோ விரோதத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பட்டாமணியம் பேசியிருக்கிறார் எ ன் ப ைத ச் சந்தானம் நன்றாகப் புரிந்துகொண்டார். அதற்கு மேலும் அங்கே நின்றுகொண்டிருக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.

பட்டாமணியத்துக்காக வாங்கிச் சென்றிருந்த ஆப்பிளையும் ஆரஞ்சையும் அருகிலிருந்த முனிய னிடம் கொடுத்தார். 'நான் வற்றேன் பட்டா மணியம்!?’ என்ற சந்தானம்; பதிலுக்குக் கூடக் காத் திராமல் வேகமாக ஆஸ்பத்திரி காம்பவுண்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்.

சந்தையில் எப்போதோ தமக்கு வேண்டா மென்று அந்தக் கன்றுக்குட்டியை அவர் விற்ற துண்டு. ஆனால் அதற்குப் பட்டாமணியம் கூறுவது போல் எவ்விதத் தீய காரணமும் இல்லை.

வண்டியில திரும்பிக்கொண்டிருந்த சந்தானம், வழிநெடுக, தம்மைப் பற்றிப் பட்டாமணியம் கூறிய