பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. ஒம் நமசிவாய வாழ்க! சிறப்புப் பாயிர மாலை | திருமதி செளந்தரா கைலாசம் : நெஞ்சினிமை நிறைந்து வர நிலைத்து வாழி! யுகமுடிவில் பெருக்கெடுத்த ஊழி வெள்ளம் உலகழிக்கச் சீற்றமுடன் எழுந்த வேளை புகலருளும் பேசிறைவன் உறைந்த கோயில் பொன்றாமல் தோணியென மிதந்த தாலே சகமுழுதும் கொண்டாடிப் பெருமை சேர்க்கும் தலமான கோழி யதனைப் பற்றிப் பு:கல்வதற்கு மொழியுண்டோ? வார்த்தை உண்டோ? பூதலத்தில் இணையான பதியும் உண்டோ? வெள்ளத்தில் தோணியென மிதந்த கோயில் வீற்றிருக்கும் முதலிறையாம் தோணி யப்பர் பள்ளத்தில் வீழ்ந்துதுயர்ப் பட்டு மாளும் பாருலக மானுடரைக் கரையிற் சேர்க்க உள்ளத்தில் அருள்பொங்கி ஞானச் செல்வம் ஊட்டுகிற குருவாகக் காட்சி நல்கும் கொள்ளையெழில் திருப்பதியாம் காழி நோக்கிக் கும்பிட்டால் அதுபோதும்; வினைகள் போகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/10&oldid=855938" இலிருந்து மீள்விக்கப்பட்டது