பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. vjii அத்தகைய காழியிலே வேதம் ஒதும் அந்தணரில் சிறந்தவராய்த் திகழ்ந்து நின்ற உத்தமராம் சிவபாத இருத யத்தார், உற்றதுணை பகவதியார், உள்ளம் ஒன்றி நித்தியனை எப்பொழுதும் நெஞ்சில் தாங்கி நெறிசிறிதும் பிறழாமல் அறங்கள் போற்றி எத்தகைய குறையுமிலா துலகில் சைவம் ஏற்றமுற வேண்டுமென வாழ்ந்தி ருந்தார். வேதநெறி தனை வளர்க்கும் அன்பு மைந்தன் வேண்டுமென இருவருமே இறையை வேண்ட ஆதிமுதற் பொருளான ஈசன் நல்ல அருள்காட்டி வரம் தந்தான்; கோள்கள் எல்லாம் ஆதரவாய் அமைந்துள்ள வேளை தன்னில், ஆதிரையில், ஆளுடைய பிள்ளை நல்லார் பேதமிலாத் தம்பதியர்க் குலகில் என்றும் பெருமைதரும் மகவாக அவத ரித்தார்! . எவருக்கும் பிறவாத பிள்ளை தன்னை ஈன்றெடுத்த பெற்றோர்கள் மகிழ்வில் துள்ள, அவருடைய சுற்றத்தார் அழகு பொங்கும் அருமகவை நிதம் வாழ்த்தி உவகை கொள்ள, புவனமதில் வாழ்கின்ற உயிர்கள் இன்பப் பொழிலதனில் திளைத்தாடிப் பூரிப் பெய்த, சிவனவனின் அருட்பரிசாய், அமுத ஊற்றாய்த் திருஞான சம்பந்தப் பிள்ளை வாழ்ந்தார். பெற்றெடுத்த அன்னைபக வதியார் மிக்கப் பிரியமுடன் முலைப்பாலை ஊட்டும் காலை சிற்பரனின் திருப்பாதம் எந்தப் போதும் - சிந்திக்கும் அன்பினையும் கலந்து தந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/11&oldid=855949" இலிருந்து மீள்விக்கப்பட்டது