பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix குற்றமெலாம் தீர்த்துவிடும் நீறை மட்டும் கோலமிகும் திருதுதலில் காப்பாய் இட்டு நற்றவத்தின் தடத்தினிலே நடைபயிற்றி நாள்தோறும் நலம்பெருக வளர்த்தி ருந்தார்: கையூன்றிக் கால்மடித்துத் தலைய சைத்துக் களங்கமிலாச் செங்கீரை ஆடும் தோற்றம், பொய்யூன்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் இந்தப் பூவுலகம் நன்மையுறப் புன்மை மாய, மெய்யூன்றும் பெருமழுவார் தொண்டை அல்லால் வேறேதும் ஒப்புகிலேம் என்று சொல்லித் தெய்வநெறி வளர்ப்பதுவாய்த் தெரியக் கண்டு திகட்டாத ஆனந்தத் தேனை உண்டார்! பிள்ளையவர் இருகரமும் சேர்த்த வண்ணம் பேரழகாய்ச் சப்பாணி கொட்டும் தோற்றம் கொள்ளைநலம் தரும்சைவ நெறியை அன்றிக் கொள்வதிலை வேறொன்றை என்ப தேபோல் உள்ள மதில் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டார்; ஒப்பரிய மகிழ்ச்சியெனும் இமயம் சென்றார்! எள்ளளவும் குறையின்றி எந்த நாளும் எழில்விழியின் இமையாகக் காத்தி ருந்தார்: ஈரகவை கடந்துவிட மூன்றாம் ஆண்டும் இசைவாக நடைபோடத் தொடங்கும் போது சீருடைய பிள்ளையினைப் பெற்ற தானத சிவபாத இருதயர்ஒர் தினத்தில் ஒங்கும் பேருடைய பிரமபுரக் கோயிலுக்குள் பிரமநறுந் தீர்த்தமதில் ஆடப் போந்தார். ஆர்வமுடன் ஆளுடைய பிள்ளை யாரும் அவரோடு திருக்கோயில் சென்ற டைந்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/12&oldid=855960" இலிருந்து மீள்விக்கப்பட்டது