பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

聂载。 奚 புனிதமிகு தீர்த்தத்தின் கரையில் அன்பு பொங்கிவரப் பிள்ளையினை அமர்த்தி ஐயன் மனம்ஒன்றி அகமருட மந்தி ரத்தை மாசறவே ஒதுதற்கு நீருள் ஆழ்ந்தார் முனம்.உலகில் பிறந்திட்ட நினைவு மீண்டும் மூண்டுவரப் பிள்ளையவர் வதனம் வீங்க இனிமைமிகு குரல்காட்டி அம்மை அப்பா' என்றழுதார் திருக்கோயில் விமானம் நோக்கி, பிள்ளையவர் அழுங்குரலைச் செவியில் கேட்ட பிரமபுரத் தீச்வரனார் உமையை நோக்கி வள்ளத்தில் முலைப்பாலைச் சிறிது வாங்கி வாடியழும் குழந்தைக்கு வழங்கச் சொல்ல, உள்ளத்தில் தாயாகிப் பொற்கிண் ணத்தில் உயர்வுதரும் சிவஞானம் குழைத்த பாலை கிள்ளைமொழித் திருநிலைநா யகியாள் தந்தாள்! கிட்டாத பெரும்பேற்றைப் பெற்றார் பிள்ளை! 32. சிற்றெறும்பு பக்கத்தில் ஊர்ந்து விட்டால் 疆3。 தேள்கொட்டி விட்டதுபோல் நடுக்கம் கொண்டு பெற்றவொரு பிள்ளையினைப் பெண்ணொ ருத்தி பெட்டகத்துப் பொற்குவையாய்க் காப்பாள் (என்றால் முற்றுகிற அன்பாலே உலகை ஈன்ற முதல்வியவள் தெருப்பிள்ளை அழுத வேளை உற்றவொரு தாய்மை நலம் உளத்தில் பொங்க ஓடிவந்து காப்பதிலே விந்தை என்ன? ஒப்பரிய தாய்மைநலம் உள்ள தால்தான் உலகமெலாம் தழைக்கிறது! நாட்கள் எல்லாம் செப்பரிய விதமாக ஓங்கி நிற்கும் - சிறப்பதனை அடைகிறது! கவிழ்ந்து போகாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/13&oldid=855971" இலிருந்து மீள்விக்கப்பட்டது