பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$5. xi கப்பலிலே பயணித்து வாழ்க்கை என்னும் கடல்கடக்கச் செய்கிறது. மக்கள் காணும் சொப்பனத்தை நனவாக்கிக் கையில் தந்து சுகம்பெருக்கி நிற்கிறது: வாழ்க தாய்மை! தாயுமையாள் அருளுறித் தந்த பாலைத் தன்பசிக்கு மருந்தாக உண்ட பிள்ளை வாயினிரு மருங்கினிலும் பால்வ ழிந்து வருவதனைத் தந்தையவர் வெகுண்டு நோக்கி, ஆய்வின்றி, அப்பாலைத் தந்தார் யாரென் றரும்மகவைக் கோலொன்றால் அடிக்கப் போக, நேயமிகும் மகவதுவோ விரலாற் சுட்டி நிர்மவனாம் தோணிபுரத் திறையைக் காட்டும்! தோடுடைய செவியன்" எனத் தொடங்கு கின்ற தூயதமிழ்ப் பாட்டிசைத்து ஞானப் பிள்ளை பீடுபெற விளங்கியவோர் நிலைமை கண்டு . பெற்றெடுத்த தந்தையவர் வியப்பில் ஆழ்ந்தார்: ஆடுகிற சிவபெருமான் தாளைப் பற்றும் அருள்நெறியைத் தமிழிசையால் பரப்பு தற்கு தாடுபல வலம்வந்து தொண்டு செய்யும் நல்லவரைப் பெற்றதனால் உவகை சூழ்ந்தார்! தெய்வநெறி, சைவநெறி உலகம் எங்கும் திகழ்ந்தினிது பரவுதற்கு நாளும் தொண்டு செய்ததிரு ஞானசம் பந்தர் வாழ்வைச் சிறப்பாக ஆய்ந்தினிய தமிழ்நூ லாக்கி வையமெலாம் பயன்எய்த வழங்கு கின்ற மாண்புடைய ஆசிரியர் அவரைப் பற்றிக் கையகலத் தாளுக்குள் எழுதப் போமோ? - களித்தமிழில் அடங்கிடுமோ கவின்கள் எல்லாம்? రx

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/14&oldid=855982" இலிருந்து மீள்விக்கப்பட்டது