பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii 17. சுப்புரெட்டி யாரென்று சொல்லும் போதே H3. 19. சுகமான சுவைமிக்க தமிழ்ம ணக்கும்! ஒப்பரிய ஆராய்ச்சித் திறன்கள் மிக்க உயர்வுடைய நூல்களின் நற் சங்கொ லிக்கும்: செப்பமுள சிந்தனையின் ஆழத் துள்ளே திகழ்ந்தொளிரும் முத்தான கருத்துப் பூக்கும்: கப்புகிற இருளதனை விலக்கி வைக்கும் காரியங்கள் அகலாமல் கால்ப திக்கும்: முத்துமணி ரத்தினங்கள் கோத்த தேரில் முடியாத அழகதனைக் கொலுவி ருத்தி எத்திசையும் புகழ்விளங்கப் பவனி செல்லும் ஏற்பாட்டைச் செய்யுமொரு வேந்த னைப்போல் மெத்தஎழில் விளங்குகிற கருத்துத் தேரில் மேலான இலக்கியத்தை அமரச் செய்து புத்தொளியை நாற்புறமும் பரவ விட்ட பூந்தமிழர் திரு.சுப்பு ரெட்டி யார்தான்! திருமாலை நெஞ்சத்தில் நிறைத்தி ருப்பார்! சிவனாரை எக்கணமும் நினைத்தி ருப்பார்: ஒருகாலும் பிறர்போற்றும் மதத்தை, வாழ்வை உள்ளத்தில் குறைவாகக் கருத மாட்டார்! சருகாக உலகத்தில் வாழ்வோர் மீண்டும் . தழைக்கின்ற வழிகாண முயற்சி செய்வார்: கருகாமல் காயாமல் அறிவுக் கன்று கற்பகமாய்ச் செழித்தோங்க வகைகள் காண்பார்! துறையூருக் கருகினிலே கோட்டாத் தூரில் துயர்திரு நல்லப்ப ரெட்டி யாரும் உறுதுணையாம் காமாட்சி அம்மாள் தாமும் உளம்கலந்து நிதம்வாழ்ந்த குடும்ப வாழ்வில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/15&oldid=855993" இலிருந்து மீள்விக்கப்பட்டது