பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 22. 23, xiii இறைவனவன் அருள்பூக்க இன்பம் சேர்க்கும் எழில் மகவாய்ச் சுப்பு ரெட்டி யார்பிறந்தார்! கறையறியாப் பாதையினைப் பெற்றோர் காட்டக் காலமெலாம் அவ்வழியே நடக்க லானார்: ஏணியென வறுமையினை இளமை வாழ்வில் ஏற்றுக்கொண் டயராமல் உயரச் சென்றார்! சாணையென நூல்களினால் அறிவைத் தீட்டித் தக்கபல பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்! பூணுகிற பதவிளது வான போதும் புகழ்பெருகும் விதமாகச் செயல்கள் செய்தார் ஆணவமே இல்லாமல் அமைதி சார்ந்த அன்பொளிரும் நல்லகத்தை உடைமை பெற்றார்! பெருமைமிகு துறையூரில் நிலக்கி ழாரின் பேரோங்கும் பள்ளியிலே தலைமை தாங்கி அருமைமிகு கல்வியினை இளஞ்சி றார்கள் அறிந்துணர ஊக்கமுடன் தொண்டு செய்தார்: தருமமிகு திருக்காரைக் குடியில் கல்வி தனைப்பயிற்றும் ஆசிரியர் பயிலு கின்ற ஒருபெரிய கல்லூரி யதனில் வாழ்வை உணர்த்துகிற தமிழ்த்துறையின் தலைமை பெற்றார்: திருப்பதியில் வேங்கடவன் பேரைக் கொண்டு திகழ்ந்திடுபுல் கலைக்கழகம் தன்னில் இன்பம் வரப்புரியும் செந்தமிழை வளப்படுத்தும் வாய்ப்பான நற்றுறையின் தலைமை ஏற்றுக் கருத்துயரச் செயலுயரச் சிந்தை முற்றும் கரும்பான தமிழமுதம் உயர்ந்து பொங்க, திருத்தமுறும் பலபணிகள் ஆற்றி நின்ற திருவுடையார் அறிவுடையார் திறமை மிக்கார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/16&oldid=856004" இலிருந்து மீள்விக்கப்பட்டது