பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. 25. 26, 27. xiv அரியகலைக் களஞ்சியத்தைப் பதித்து நல்கும் ஆசிரியர் குழுவதனில் முதன்மை தாங்கி உகியபல சிறப்புடைய நூல்கள் தம்மை ஊன்றிநிதம் படித்தாய்ந்து முடிவு செய்து, பெருமையுற வெளியிட்டுத் தமிழின் னைக்குப் பெரிதான புகழாரம் தேடித் தந்த ஒருதமிழர் உயர் தமிழர் உலகம் யாவும் உளமாரப் புகழ்ந்தேத்தும் உண்மைத் தொண்டர்: கணக்கற்ற அவைகளிலே பங்கு கொண்டு கலைவளரப் பேருதவி புரிவார்! அன்பு மணக்கின்ற மனம்தாங்கி நாடு முற்றும் வலம்வந்து தீந்தமிழை ஆய்வார்: தெய்வ அணுக்கத்தில் எப்போதும் இன்பம் காணும் ஆசையுடன் நல்வாழ்க்கை வாழ்வார்! தூய குணக்குன்றாய், அருட்குன்றாய், கொள்கைக் குன்றாய். குறையற்ற நலக்குன்றாய்த் திகழ்வார்! வாழி! அவரெழுதித் தந்திருக்கும் நூல்கள் தம்மை அளவிடுதல் எளிதில்லை! சொல்லப் போனால் நவநிதியக் குவியல் அவை! மதிக்க ஒண்ணா நலமருளும் நதிகள் அவை சூழ்ந்து மாய்க்கும். பவவினையின் இருளதனை விலக்க வந்த பகலவனின் கதிர்களவை! வாழ்வு நல்கும் தவத்தின் உயர் மலைகள் அவை என்று போற்றத் தக்கவிதம் விளங்குவன: தந்தார் வாழி! அறிவியலை அவரறிவார்! இலக்கி யத்தை ஆராயும் வகையறிவார்! வளமை கொள்ள உறுதுணையாய் யாவர்க்கும் உதவு கின்ற உளவியலும் தெளிவுறுவார் நாட்டில் உள்ள சிறுவர்களை இளைஞர்களைப் பயிற்று விக்கும் திறனறிந்து செயல்புரிவார்! இவற்றின் மேலாய் இறையுணர்வில் தமையிழந்த பெரியோர் வாழ்வை எழிலமுதத் தமிழ்மொழியில் தருவார்! வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/17&oldid=856015" இலிருந்து மீள்விக்கப்பட்டது