பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. 29. 30, XV இவ்வகையில் அவர் தந்த ஞானசம் பந்தர் எனும் அரிய நூலதனைப் படித்த போதில் செவ்வை புற விளக்கும் அரும் கருத்த னைத்தும் சிந்தையிலே ஒளிகாட்டித் திகழக் கண்டேன்! கொவ்வை மலர் வாயிதழாள் உமையி னோடு குலவுகிற சிவபெருமான் எதிரில் தோன்றி உய்வகையைக் காட்டுகிற உணர்வைப் பெற்றேன்! ஒங்குகிற சிவநெறியின் உயர்வைக் கண்டேன்! மதுபோன்ற பூந்தமிழின் இனிமை காட்டி மதிநுட்ப ஒளிகாட்டி மகிழ்வை ஊட்டும் இதுபோன்ற பலநூல்கள் யாத்து மாந்தர் இறையருளைத் துய்க்கின்ற வழியும் காட்டப் பொதுமன்றில் நடமாடும் ஈசன் அன்பு பூத்தருளைத் திரு. சுப்பு ரெட்டி யார்க்கு நிதம்வழங்கி நின்றிடுவான்! நீண்ட காலம் நெஞ்சினிமை நிறைந்துவர நிலைத்து வாழி! சித்தமதில் எப்பொழுதும் இறையைத் தாங்கித் திகழ்வுடைய நறுந்தமிழில் தெளிவு மிக்க புத்தகங்கள் புதுமையுற எழுதி இந்தப் புவியினர்க்கு வழங்கி உயர் புகழ்கு விக்கும் வித்தகராம் திரு. சுப்பு ரெட்டி யார்க்கு மேன்மைகளும் வளமைகளும் மிகுந்து சேர ஆத்தனவன் அருளமுதம் பொழிவான்! நீண்ட ஆயுளுடன் அப்பெரியார் இனிது வாழி! நாதன்தாள் வாழ்க. முருகனடி' يحه 24, கஸ்தூரி ரங்கன்சாலை தேனாம்பேட்டை - செளந்தரா ைகலாசம் சென்னை-600018 24-#1-1986.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/18&oldid=856026" இலிருந்து மீள்விக்கப்பட்டது