பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுமல நிகழ்ச்சிகள் క5 பிள்ளையாருக்கு எதிரே தோன்றுகின்றார் வாகீசர் பெருமான். இவரைக் கண்ட கவுணியக்கன்று நேயமலிந்தவர் சிவவேடத்தைச் சிவனெனவே தெளிந்து வழிபடும் முறைப் படி, இதுகாறும் தமது உள்ளக் கிழியிலே எழுதிப் போற்றப் பெற்ற தொண்டர் திருவேடமே திருநாவுக்கரசர் வடிவில் எழுந்தருளியதெனக் கொண்டு தொழுது போற்று கின்றார். பேராவலுடன் ஆராவிருப்பினால் எதிர் வந்து வணங்கிய நாவுக்கரசரைப் பிள்ளையார் தம் எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி அப்பரே என்று அழைக் கின்றார். நாவுக்கரசரும் அடியேன்” என மகிழ்ந்துரைக் கின்றார். இந்தக் காட்சி அருகிருந்தோரின் நெஞ்சினை நெகிழவைக்கின்றது. பின்பு பிள்ளையார் அரசரைத் திருத் தோணிபுரத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று இறை வனை வணங்கித் தமது திருமாளிகைக்கு உடன்கொண்டு செல்லுகின்றார். அரசர்க்கும் உடன்வந்த அடியார்க்கும் சிறப்பாக அமுது செய்விக்கின்றார்; உண்ட பின்னர் இருவரும் அளவளாவி மகிழ்கின்றனர். அப்பர் பெருமானும் சீகாழியில் சில நாட்கள் தங்கியிருந்து இறைவனை வணங்கிப் போற்றுகின்றார். பின்னர் பிரியாத நண்புடை பிள்ளையார்பால் விடைபெற்றுச் சோழநாட்டுத் திருத் தலங்களை சேவிக்கச் செல்லுகின்றனர். பிள்ளையாரின் மொழித்தொண்டு: பிள்ளையார் சீகாழிப் பதியில் தங்கியிருக்கும் நாட்களில் திருத்தோணிபுரத்து இறைவனைப் பல்வேறு சித்திரக் கவிகளால் பரவிப் போற்றுகின்றார். இதனைச் சிறிது வி. வ ர மா. க க் காண்போம். மிறைக்கவிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக விளக்குவேன். 4. அருளிச் செயல்கள்’ என்ற தலைப்பில் விவரிக்க வேண்டியவற்றை ஈண்டுக் காட்டுகின்றோம்-தோன்றிய இடத்திலேயே சொல்லலாம் என்று கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/100&oldid=855939" இலிருந்து மீள்விக்கப்பட்டது