பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ ஞானசம்பந்தர் சேவித்தும் ஆங்காங்கே சில நாட்கள் தங்கியும் வந்த நிகழ்ச் சிகளை நோக்கும்போது இந்தக் காலம் மூன்றாண்டு களாவது கடந்த காலம் என்பதை ஊகிக்கலாம். ஆகவே, பின்ளையாருக்கு ஆறுவயது நிரம்பி ஏழாம் வயது தொடங்கிய காலத்தில்தான் உபநயனச் சடங்குகள் தடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒருவாறு துணியப் படும். ஈவுக்கரசர் கட்பு : உபநயனம் முடிந்து சண்பை வேத்தர் கோழிப்பதியில் தங்கியிருக்கும்போது தில்லை பம்பலப் பெருமானை வணங்க வருகின்றார் சிதம்பரத் திற்கு. இதற்கு முன்னரே காழிப் பிள்ளையார் மூவாண்டுப் பருவத்திலேயே சிவஞானம் பெற்ற அற்புத நிகழ்ச்சியை அடிகார்கள்மூலம் கேள்வியுற்றிருந்தார் நாவுக்கரசர். இப்போது பிள்ளையாரைக் காணவேண்டும் என்று பேரார்வத்துடன் சீ கா ழி க்கு எழுந்தருள்கின்றார். அமைச்சர் முதலியோர் வருகையைச் சட்டமன்ற உறுப் பினர்கள், கட்சித் தொண்டர்கள்மூலம் அறிவதுபோல், கல்லே புனையாகக் கடலினைக் கடந்த திருநாவுக்கரசர் தம்மைக் காணும்பொருட்டுக் காழிப்பதியின் எல்லையில் வந்தணைந்தார் என்பதைப் பிள்ளையார் கேள்வியுறு இன்றார் அடியார்கள் மூலம். உடனே அடியார்களும் அன்பர்களும் புடைசூழ நாவுக்கரசரை நகர் எல்லை விலேயே எதிர்கொண்டு வரவேற்கின்றார். உள்ளத்துப்பெருகி வழியும் இடையறாத பேரன்பாலும் மூப்பின் தளர்ச்சியாலும், சிவானந்தவிளைவின் மிகுதி பாலும் திருமேனியில் தோன்றிய அசைவும் உடுத்த கத்தையும் மிகையெனக் கருதும் துறவுள்ளமும், உழைப்பே பெரிதெனக் கொண்டதற்கு அடையாளமாகத் தாங்கி அள்ள உதிவாரப்படையும், இறைவனை இடையறாது தைந்து உருகுதலால் கண்களிலிருந்து மழைபோல் சொரியும் கண்ணிரும் பொன்மேனியிற் பூசப்பெற்ற திருவெண்ணிறும் உடையராய் ஈறிலாச் சிவவேடத்தோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/99&oldid=856569" இலிருந்து மீள்விக்கப்பட்டது