பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல் நிகழ்ச்சிகள் 53 காழிப் பிள்ளையார். உடனே துஞ்சலும் துஞ்சலிலாத போதிலும் (3.22) என்ற முதற் குறிப்புடைய பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடியருளுகின்றார். இதன் கண், மந்திர கான்மறை யாகி வானவர் சிங்தையுள் கின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ முத்துமே. (2) என்ற இரண்டாவது திருப்பாடல் அருமறையந்தனர் சந்தியாவந்தன காலங்களிலும் சிறப்பாக அந்திக்காலத் திலும் ஓத வேண்டிய திருமந்திரம் சிவய கம' என்ற திருவைந்தெழுத்தே என்று வலியுறுத்துவதைக் காணலாம். ஐந்தெழுத்தின் பெருமையைப் பிள்ளையார், காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாம் நமச்சி வாயவே. (3.49: 1) என்று பிறிதோரிடத்திலும் கூறுவதைக் காணலாம். உலகியல் முறைப்படி உபநயனச் சடங்கு நிகழ வேண்டிய பருவம் ஏழாண்டு என்பது மரபாக நடைமுறை யிலிருப்பது. இதனைச் சேக்கிழார் பெருமானும், நிகழும் முறைமை ஆண்டேழும் நிரம்பும் பருவம் வந்தெய்தப் புகழும் பெருமை உபநயனப் பொருவில் சடங்கு முடித்து’ என்று கூறியிருப்பதைக் காணலாம். வைதிக நூல்களிலும் உபநயனச் சடங்கு நடைபெற வேண்டுவது ஏழாண்டுப் பருவத்திலேயே என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. ஞான சம்பந்தர் முதல் சுற்றுப்பயணத்தில் பல தலங்களைச் 3. பெ.பு: சண்டேசு-14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/98&oldid=856568" இலிருந்து மீள்விக்கப்பட்டது