பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கழுமல நிகழ்ச்சிகள் சம்பந்தப் பிள்ளைார் சீகாழிப்பதியில் அமர்ந் திருக்கும்பொழுது அவருக்கு ஏழாண்டுப் பருவம் வந்துறு கின்றது. ஒரு பிறப்பும் நேராதபடி அம்பிகையூட்டிய ஞானப்பாலால் சிவஞானம் பெற்ற பிள்ளையாருக்கு அருமதை அத்தணர்கள் தம் குலத்தின் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் உப நயனச் சிறப்பினை உலகியல் முறைப்படி செய்கின்றனர். மான் தோலுடன் அமைந்த முப்புரி நூலினை அணிந்து மறை நான்கும் தந்தோம் என்று மொழிந்த மறையோர்கட்குப் பின்ளையார்தம் புனிதவாக்கால் எண்ணிறந்த புனித வேதங்களை இயம்பியருளினார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். மறைவல்லோர்கள் தாம் தாம் ஓதிப் பயிற்சி பெற்ற மறைகளில் தமக்கு உண்டான ஐயங்களைப் பிள்ளையாரிடம் கேட்டுத் தெளிவு பெறு இன்றனர். மந்திரங்கள் யாவும் தோன்றுவதற்கு ஏதுவாகிய மூலமந்திரம் திரு.ஐத்தெழுத்தே என்ற உண்மையினை வேதியப் பெருமக்களுக்கு உணர்த்தக் கருதுகின்றார் 1. மூன்றாண்டுப் பருவத்தில் பாடத் தொடங்கிய பின்ளையார் மூன்று ஆண்டுக் காலத்தில் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு இருபது தலங்கட்குமேல் சேவித்ததை நினைக்கும்போது நாம் வியப்புக் கடலில் ஆழ்கின்றோம். . 2. பெ. பு: ஞானசம்பந்.254.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/97&oldid=856567" இலிருந்து மீள்விக்கப்பட்டது