பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 51 நாரையூர்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கருப்பறியலூர் வருகின்றார். இத்தலத்துப் பெருமானை கற்ற மொடு பற்றவை (2.31) என்ற திருப்பதிகத்தால் வழிபடுகின்றார். இத்தலம்தான் இச் சுற்றுத்தலப் பயணத்தில் இறுதியாக வழிபட்டது. இதனை முடித்துக் கொண்டு சீகாழி வந்து விடுகின்றார். இச்சுற்றின் முடிவில் பிள்ளையார் கழுமலத்திற்குத் திரும்பியபோது ஊர்ப் பெருமக்களும் சிவனடியார்களும் அவரை வரவேற்ற இறப்பினைச் சேக்கிழார் வாக்கினால்தான் அநுபவிக்க வேண்டும். இச்சுற்றிலுள்ள தலங்களைப் படம் வரைந்து குறிப்பிட்டால் ஒன்றை விட்டு ஒன்று அண்மையிலிருப்பது தெரியவரும். 25. கருப்பறியலூர்: (தலை ஞாயிறு): வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5 கல் தொலைவு. கோயில் பெயர் "கொகுடிக் கோயில்." 26. பெ. பு: ஞானசம்பந்தர். (256 - 262).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/96&oldid=856566" இலிருந்து மீள்விக்கப்பட்டது