பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல் நிகழ்ச்சிகள் 57. விசயற்கு வில்லும் கொடுப்பர்: (அவர்யாரெனின்) பீடது அணிமணி மாடப் பிரமபுரத்து அரர். என இவ்வாறு மொழிகளை முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறையில் பிள்ளையாரால் அருளிச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறே இத்திருப் பதிகத்துள்ள எல்லாப் பாடல்களும் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் நோக்கத்துடன் அருளிச் செய்யப் பெற்றமையால் இத்திருப்பதிகம் மொழி மாற்றுக்கு இலக்கியமாகின்றது. இது பிரமபுரம் என்ற தலப் பெயரில் எழுந்தது. மாலை மாற்று: ஒரு செய்யுளை முதலிலிருந்து படித்தாலும், அன்றி இறுதி தொடங்கி படித்தாலும் அதே செய்யுளாக அமையும்படிப் பொருளும் ஒசையும் ஒத்த எழுத்துகளை நிரலே பெற்ற செய்யுள் மாலை மாற்று" என்ற சித்திரக்கவியாகும். யாமாமாl (3. 117) என்னும் திருப்பதிகம் பிள்ளையார் அருளிய மாலை மாற்றாகும். யாமா மாt யாமாமா யாழி காமா கா ணாகா காணா காமா காழியா மாமா யாரீ மாமாயா என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். ஈரடிகளாக அமைந்த இப்பாடலில் முதலடியை இறுதி தொடங்கிப் படித்தால் அஃது இரண்டாமடியாக அமைதலும், இரண்டாமடியை இறுதி தொடங்கிப் படித்தால் அது முதலடியாக அமைதலும், இவ்விரண்டடிகளையும் முதலி லிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் ஒரே பாடலாக அமைதலைக் காணலாம். இது காழி என்ற தலப் பெயரில் எழுந்த திருப்பதிகம். இப்பதிகத்தின் பாடல் களனைத்துமே இம்முறையில் அமைந்து {}; மாற்றுக்கு இலக்கியமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/102&oldid=855941" இலிருந்து மீள்விக்கப்பட்டது