பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ ஞானசம்பந்தர் வழிமொழி : ஒரு பாடலில் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து அப்பாடலில் பின்வரும் சீர்கள்தோறும் ஒன்றி வழி பெதுகையாய் வருவது வழிமொழி எனப்படும். "சுரருலகு" (3, 7) என்ற திருப்பதிகம் இந்தச் சித்திரக் கவிக்கு எடுத்துக் காட்டாகும். இதன் முதற்பாடலின் முதலடி, சுரருகுை கரர்கள்பயில் தானிதல முரணழிய அமைதில் மூப் தண்ணதன தனணதன தனணதன தனணதன தனணதனனா என வரும். இப்பதிகப் பாடல்கள் குற்றெழுத்துப் பயின்று முடுகியவால் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர் தோறும் ஒன்றி : எதுகையாய் வந்தமையால் வழி மொழித் திருவிராகம் என்னும் பெயர் பெறுகின்றது. இதன் திருக்கடைக்காப்பில் கழுமலநகர்ப், பழுதிலிறை யெழுதுமொழி தமிழ் விரகன் வழி மொழிகள் எனக் குறிக்கப் பெறுதலால், இப்பதிகம் வழியெதுகை யாகி, வழி மொழி என்னும் பெயர் பெற்றமை இனிது புலனாதல் காண்க. வழிமொழி என்பது, பிள்ளையாரால் இடப் பெற்றதும் தெளிவாகும். இவ்வாறே இதனையடுத்துள்ள பதிகமும் 3.68) வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளு மகிழ்வர் என்றாங்கு வழியெதுகை பெற்றிருத்தல் காணலாம். இது பிரமபுரம்’ என்ற தலத்தின் மீதெழுந்தது. மடக்கு : ஒருபாடலில் முன்வந்த சீரும் அடியும் அவ்வாறே மீட்டும் மடக்கி வரப் பெறுவது மடக்கு ஆகும். (வட மொழியில் இது யமகம்' எனப் பெயர் பெறும்). விண்ணவர் தொழுதெழு (3.94) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இதில், வித்தக மறையவர் வெங்குரு மேவிய மத்த கன்மலர் புனைவீரே மத்த கன்மலர் புனைவி ருமிதடி,தொழும் சித்த துடையவர் திருவே. (8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/103&oldid=855942" இலிருந்து மீள்விக்கப்பட்டது