பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுமல நிகழ்ச்சிகள் 59 என்பது எட்டாவது பாடல். இதில் இரண்டாம் அடியே மூன்றாம் அடியாக இடை மடக்காய் அமைந்துள்ளது. இப் பதிகப் பாடல் தோறும் இம்முறையே அமைந்துள்ளது. இது வெங்குரு என்ற தலத்தின் மீதெழுந்த பதிகமாகும். இயமகம் யமகம் என்பது, ஒரடியில் முன்வந்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது. இதனை மடக்கு" எனவும்: வழங்குதல் உண்டு. யமகம் என்பது வட சொல், அதன் முதல் எழுத்தாகிய யகரம் தமிழியல் முறைப்படி மொழிக்கு முதலில் வராது: யவ்விற்கு இய்யும் (நன். பதவியல்-21) என்றபடி இகரத்தை முதலில் பெற்று, இயமகம்' என வழங்கப்பெறும். ஈண்டு அது திரு என்னும் சிறப்புடை அடைமொழி பெற்றுத் திரு இயமகம்' என வழங்கப் பெறு கின்றது. உற்றுமை சேர்வது (3. 113) என்ற முதற் குறிப் புடைய திருப்பதிகம் அறுசீரடியால் இயன்றது. உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே. தானன தானன தானதனா தனதன தானன தானதனா எனவரும். இதில் மெய்யினையே’ என்ற சொல் மடக்கி வருதல் காண்க. இது பிரமபுரத்தின்மேல் எழுந்தது. ஏக பாதம்: ஏகம்-ஒன்று; பாதம்-அடி. ஏகபாதம்-ஒரடி. ஒரடியே பொருள் வேறுபட நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாதம் என்னும் சித்திரக் கவியாகும். பிரமபுரத்துறை (1. 127) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இதில், புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே. என்பது மூன்றாம் திருப்ப்ாடலாகும். இப்பாடலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/104&oldid=855943" இலிருந்து மீள்விக்கப்பட்டது