பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல நிகழ்ச்சிகள் 6i சேக்கிழார் பெருமான். திருவள்ளுவர் அருளிய திருக்குறள் யாப்பு, முதலடி நாற்சீராய் இரண்டாமடி முச்சீராய் செப்பலோசை பெற்று இவ்வாறு இரண்டடிகளால் இயன்று வரும் குறள் வெண்பாவாகும். பிள்ளையார் அருளிய :இருக்குக் குறள், இரு சீரடியாகிய குறளடி நான்கினால் அமைந்த சந்தச் செய்யுளாகும். எனவே, திருக்குறள் யாப்பும் திரு இருக்குக் குறள் யாப்பும் தம்முள வேறாதல். கண்டு தெளியலாம். கல்லால் கீழல் அல்லத் தேவை நல்லார் பேனார் அல்லே நாமே. (3.40: 1) இது நான்கெழுத்தாலாகிய இருசீர்க் குறளடி நான்கினால் வருவது. தானா தானா என்பது, தனன. தானா எனவும், தான தனனா எனவும், தனண தணனா" எனவும் வருதல் பொருந்தும். 3.40, 3.41 ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இருசீர்க் குறளடி நான்கினால் இயன்ற திருப்பாடல்களையுடைய இப்பதிகங்களும் திரு இருக்குக் குறள் வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றுள் 3-40 காழிப்பதியின்மீது எழுந்தது. கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வென்ன டிருவா வினையே. (3.41:1) இது தனனா தானா என்னும் ஐந்தெழுத்தாலான அடி களால் அமைந்ததாகும். இதன் ஈற்றடி தனனா தனனா? என ஆறெழுத்தால் வந்தமை காண்த்தக்கது. இது கொச்சைப்பதிமீது எழுந்தது. - எழுகூற்றிருக்கை: ஒன்று இரண்டு ஒன்று, ஒன்று இரண்டு மூன்று இரண்டு ஒன்று என இவ்வாறு ஒன்று முதல் 5. பெ. பு: ஞானசம்பந், 276.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/106&oldid=855945" இலிருந்து மீள்விக்கப்பட்டது