பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ஞானசம்பந்தர் ஏழு முடியப் படிப்படியாக ஒவ்வொன்று ஏற்றியும் இறக்கி யும் இங்கனம் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப் படும் செய்யுள் எழுகூற்றிருக்கை எனப்படும். இதனைச் சித்திர கவிகளுள் ஒன்று எனப் போற்றுவர் பெரியோர் . ஏழு கூறுகளாக அறைகளைக் கீறும்போது முதற் கூறில் மூன்து அதைகளும், இரண்டாம் கூறில் ஐந்து அறைகளும், மூன்றாம் கூறில் ஏழு அறைகளும், நான்காம் கூறில் ஒன்பது அறைகளும், ஐந்தாம் கூறில் பதினொரு அறை களும், ஆறாம் கூறில் பதின்மூன்று அறைகளும், ஏழாம் கூறில் அவ்வாறே பதின்மூன்று அறைகளும் கீறி, அவ்வறை இளில் முறையே, 1 +2+ i 1+2+3+2+1 职+2+3+4+3+2+翼 1+2+3+4+5+4+3+2+1 1 +2+3+4+5+6+5+4+3+2+1 1 +2+3+4+3+6+7+6+5+4+3+2+ 1 1 +2+3+4+5+6+7+6+5+4+3+2+ 1 என்ற எண்ணமைந்த சொற்றொடர்கள் பொருந்தி யிருக்கும்படி இயற்றப்பெறும் செய்யுளாதலின் எழு கூற்றிருக்கை எனப் பெயர்எய்துகின்றது. இதன்கண் எண்கள் ஈறு திரிதலும் எண்களைக் குறித்த சொற்களே யன்றி எண்ணுதற் பொருள் அல்லாத பிற சொற்களும் 5. திருமங்கையாழ்வார் அருளிய திரு எழுகூற்றிருக்கை கம், மாறனலங்காரத்தில் ஒர் எழுகூற்றிருக்கையும், பதினோராந் திருமுறையில் நக்கீரதேவ நாயனார் இயற்றிய ஓர் எழுகூற்றிருக்கையும், யாப்பருங்கல விருத்தியில் ஒர் எழு கூற்றிருக்கையும் ஆக ஐந்து எழுகூற்றிருக்கைச் செய்யுட்கள் அறியப்படுகின்றன, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/107&oldid=855946" இலிருந்து மீள்விக்கப்பட்டது