பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல. நிகழ்ச்சிகள் - 63 இரட்டுற மொழிதலால் எண்ணுதற் பொருள் தோன்ற அமைதலும் இயல்பென்பர்." எழு கூற்றிருக்கை என்னும் இப்பனுவலைப் பாட்டின் தொடக்க எண் முதல் ஈற்றெண் முடிய அமைந்த எண் வரிசைப்படி ஏழு கூறுகளாக எழுதி, அந்நிரல்கள் ஏழினை யும் தேரொன்றின் மேற்பரப்பாகவும், பாட்டின் ஈற்றெண் முதல் தொடக்க எண் வரை அமைந்த எண்களை அவ்வாறே ஏழு நிரல்களாக எழுதி அக்கூறுகள் ஏழினையும் அத்தேரின் அடிப்பரப்பாகவும் கொண்டு தேர்ப்பந்தம்" இரதபந்தம்) என்ற சித்திரக் கவியாக அமைத்துக் காட்டு தலும் உண்டு. எழுகூற்றிருக்கைச் செய்யுளைத் தேர்ப் பந்தத்தில் அமைத்துக் காட்டுங்கால் தேரின் மேற்பரப் பிலுள்ள முதல் ஏழு நிலங்களும் ஒன்று முதல் எண்னேறி இறங்கி ஏழிறுதியேறியது பேரேற்றம்’ எனவும், அடிப்பரப் பிலுள்ள பின்னேழு நிலங்களும் அவ்வாறு ஒன்றிறாக இறங்கியது பேரிறக்கம் எனவும் வழங்கப்படும் என்பர் மாறனலங்கார உரையாசிரியர். இவ்விரு முறைகளிலும் செய்யுளிலமைந்த எண்கள் ஏழு கூறுகளாகவே அமைத் திருத்தலால், இதற்கு எழு கூற்றிருக்கை' என்ற பெயரே பொருத்தமுடையதாயிருக்கும். காழிப்பிள்ளையார் அருளிய திரு எழுகூற்றிருக்கை (1.128) என்னும் பனுவல் ஒருரு வாயினை' என்று தொடங்கும் 47 அடிகளால் இயன்ற இணைக் குறளாசிரி யப்பா. இதனை எழு கூற்றிருக்கைக்குள்ள மூல இலக்கியம் என்பர் சேக்கிழார் பெருமான். எனவே இப்பனுவல் தமிழில் எழு கூற்றிருக்கை என வழங்கும் சித்திரக் கவிக் குரிய மூல இலக்கியம் எனப் போற்றத் தகும் தொன்மை யுடையது என்று துணிந்து கூறலாம். இது பிரமபுரத்தின் மேல் எழுந்த பாடலாகும். - - 7. மாறனலங்காரம்-சொல்லணியியல்-குத். 48. 8. பெ. பு: ஞானசம்பந். 275.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/108&oldid=855947" இலிருந்து மீள்விக்கப்பட்டது