பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல நிகழ்ச்சிகள் { நலமும் பொருள் நயமும் சிறந்து விளங்குதலைக் 留厂”石凉矿@崧”是莎。 - . ஈரடி ஈரடிவைப்பு : ஈரடிச் செய்யுளின்மேல் ஈரடி வைப்பாக அமைந்திருப்பது தக்கன் வேள்வி (3:5). கொட்டமே கமழும் (3.6) என்ற இரண்டு பதிகங்களும் ஈரடி ஈரடி வைப்பு வகையைச் சேர்ந்தவை. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன் கழல் சென்று சிங்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய கம்பன் தானே. (3.5 : 1) இச்செய்யுள், தான தான தனதனா தானனா தான தான தனனா தனதனா என இரண்டடிச் செய்யுளாய் அதன்மேல், தான தானன் தான் தானன தான தானனா தானா தானா என ஈரடி வைப்பாய் வருதலின் ஈரடிமேல் ஈரடி வைப்பா கின்றதைக் காணலாம். இது பூந்தராய்மீது எழுந்த பதிக மாகும். 3.6 பதிகமும் இது போன்றதே. இது கொள்ளம் பூதுார் மீது எழுந்தது. நாலடிமேல் ஈரடி வைப்பு : நாலடிச் செய்யுளின்மேல் ஈரடி வைப்பாக அமைந்திருத்தலால் இப்பெயர் பெறு கின்றது. இயலிசையெனும் (33) என்ற முதற் குறிப் புடைய பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இயலிசை யெனும்பொருளின் நிறமாம் புயலன மிடறுடைப் புண்ணியனே கயலன வரிகெடுங் கண்ணியொடும் அயலுல கடிதொழ அமர்ந்தவனே. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/110&oldid=855950" இலிருந்து மீள்விக்கப்பட்டது