பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 75'., தலத்திற்கு வருகின்றார். கள்ளார்ந்த (243) என்ற செந்தமிழ் மாலை பாடி இறைவனை ஏத்துகின்றார். திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறங்கொண்ட சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம் மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளுரே. (6). என்பது இப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடல். ஒவ்வொரு பாடலிலும் இராவணனைப்பற்றிய குறிப்பு வருகின்றது. 1968-ம்ே ஜூன் மாதங்களில் சோழ நாட்டுத் திருமால் திருப்பதிகளை வழிபட வந்தபோது மயிலாடுதுறையில் தங்கிச் சுற்றுப்புறத்திலுள்ள திருப்பதிகளைச் சேவித்த சிறப்பெல்லாம் செல்வமுத்துக் குமாரசுவாமி என்னும் முருகனுக்கே. கிருத்திகைதோறும் பகலில் பாலாபிஷேகமும்,. இரவில் உற்சவமும் செல்வ முத்தையாவிற்கு உண்டு. அடியார்கள் ஆயிரக் கணக்கில் தரிசித்துச் சந்தனக் குழம்பு பெறுவர். நாடோறும் அர்த்த சாம வழிபாட்டில் முதலில் செல்வ முத்தையாவிற்குப் பால் நிவேதனம், நேத்திரப்பிடி, சந்தன அர்ப்பணம் செய்த பிறகே, மற்ற மூர்த்திகட்கு வழிபாடு. பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவில் வலத்தில் வைத்தியநாதர், நடுவில் செல்வ முத்துக்குமாரசுவாமி, இடத்தில் தையல்நாயகி (சோமாஸ்கந்த அமைப்பு வரிசையில்) எழுந்தருள்வர். செவ்வாய் தோஷம் போக்கும் தலம், செவ்வாய்க்கிழமை தோறும் மேஷ வாகனத்தில் அங்காரகன் திருச்சுற்றில் வலம் வருவதுண்டு. முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் குமரகுருபர அடிகள் அருளியது. தலபுராணம் வடுகநாததேசிகர் இயற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/120&oldid=855961" இலிருந்து மீள்விக்கப்பட்டது