பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 77. தெரிந்தி லங்கு கழுநீள் வயற்செங்கெல் திருந்த நின்ற வயல்சூழ்த் திருப்புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகளவர் போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. (6) என்பது ஆறாவது பாடல். திருப்புன்கூரை நினைக்கும் போது நந்தன் சரிதம் நினைவுக்கு வராமற் போகாது. அருகிலுள்ள ஆதனூரில் அவதரித்த நந்தன் அடிக்கடித் திருக்கோயிலுக்குப் புறத்தே நின்றபடி சேவித்ததும்: மூலவரைச் சேவிக்க வேண்டுமென்ற பேரவா இருந்ததும், வழிமறைத்திருக்குதே மலைபோல் ஒரு மாடு" என்ற பாடல் பெற்ற நந்தியைச் சற்றே விலகி இரும்பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம்’ என்று இறைவன் செப்பியதும், நந்தி அவ்வாறே விலகினதுமான காட்சிகள் திரைக் காட்சிகள் போல் நம் மனத்தில் குமிழியிடுகின்றன ே போவாருக்குத் (திருக்கோவிலினுள் ஆதிதிராவிட மக்கள் சட்டப்படி உட்செல்லும் உரிமை பெறாத அக்காலத்துத்} தேர் நிலையிலிருந்தே இறைவன் காட்சியளிக்கத் திருநந்தி தேவரை விலகியிருக்கும்படி கட்டளையிட நந்தி தேவரும் அவ்வாறே விலகியிருக்கும் தலம், திருநாளைப் போவார் திருப்பணியாகக் கோயிலின் மேற்கில் நந்தன் குளம் உள்ளது. ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடத்தில் 12 வேலி நிலம் கொண்டு மழை பெய்வித்ததை சுந்தரர் பாசுரம் 7.55:2 கூறும். இப்போதுள்ள கோயில் சோழர்கள் திருப்பணியுடன் பிற்காலத் திருத்தங்களும் சேர்ந்துள்ளன. 6. தென்திருப்பேரை நகரில் (நெல்லை மாவட்டம்) பெருமாள் பிள்ளைகள் விளையாட்டைக் காண்பதற்கு, கருடனை விலகியிருக்குமாறு கூறினதும், இங்கு சிவபெருமான் நந்தன் தன்னைச் சேவிப்பதற்கு நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதும் ஒருபுடை ஒப்புடை. έlfώξ2 δάι και . . . ; .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/122&oldid=855963" இலிருந்து மீள்விக்கப்பட்டது