பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஞானசம்பந்தர் திருப்புன்கூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு "மண்ணிப் படிக்கரை என்ற திருத்தலத்திற்கு வந்து வழிபடு கின்றார் (பதிகம் இல்லை). இங்கிருந்து அன்னியூர்” சென்றடைகின்றார். மன்னியூரிறை (1.96) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி வழிபடுகின்றார். நீதி பேனுவீர் ஆசி பன்னியூர்ச் சோதி கா:மே - ஒதி புய்ம்மினே. (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல், அன்னியூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு குறுக்கை வருகின்றார். இறைவனை வழிபட்டு (பதிகம் இல்லை) பக்தனை கல்லூர்' வந்தடைகின்றார். இஃது இரண்டாவது முறை வருகை தந்தது. இறைவனை வழி பட்டுத் (பதிகம் இல்லை, திருமணஞ்சேரி வருகின்றார். அயிலாரும் (2.16) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். இதில், 7. மண்ணிப் படிக்கரை (இலுப்பப்பட்டு): வைத்தீசு வரன் கோயிலிலிருந்து 9 கல் தொலைவு. சுந்தரர் பாடல் மட்டும் பெற்துள்ள தலம். 8. அன்னியூர் (பொன்னுரர்): நீரூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. 9. குறுக்கை வீரட்டம் : நீடூர் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 5 கல் தொலைவு. மன்மதனை எரித்த வீரட்டம். அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 10. பந்தனை கல்லூர் : முன்னர் விளக்கப்பட்டது (பாணருடன் பயணம்-காண்க) பக் 46. 11. மணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி): குத்தாலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/123&oldid=855964" இலிருந்து மீள்விக்கப்பட்டது