பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 79 எண்ணானை எண்ணமர்சீர் இமையோர் கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்றும் உடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேச கின்றார் பெரியோர்களே. (7) என்பது ஏழாம் பாடல். திருமணம் சேரி ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு எதிர்கொள் பாடி வருகின்றார். இறைவனைச் சேவித்து (பதிகம் இல்லை, திருத்துருத்தி - வேள்விக்குடி' , ' வரு கின்றார். இந்த இரு தலங்களையும் இணைத்து ஓங்கி மேலுழி (3.90) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடிச் சேவிக்கின்றார். புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடி யணிந்து திரிதரு இயல்பினர் திரிபுர மூன்றையுங் தீவ ளைத்தார் வரிதரு வனமுலை மங்கையொ டொருபக்ல் அமர்ந்த பிரான் விரிதரு துருத்தியார் இரவிடத் துறைவர் வேள்விக் குடியே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல். 12. எதிர்கொள் பாடி (மேலைத் திருமணஞ்சேரி) : குத்தாலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து3; கல் தொலைவு. சுந்தரர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 13. துருத்தி (குத்தாலம்): குத்தாலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. இறைவன் கட்டளைப் படி இங்குள்ள குளத்தில் மூழ்கிய சுந்தரர், தமது உடலுறு பிணி நீங்கி மணிஒளிசேர் திருமேனி ஆகின்றார். 14. வேள்விக்குடி : குத்தாலத்திலிருந்து 3 கல் தொலைவு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/124&oldid=855965" இலிருந்து மீள்விக்கப்பட்டது