பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑽 ஞானசம்பந்தர் இவற்றையடுத்து கோடிகா' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இன்று கன்று' (2.99) என்ற முதற்குறிப் &#ಔ-ಓ! இருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். இதில் இதில் : முன்னை கீர்செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியா தின்ன கீர்இ டும்பையில் முழ்கி நீரெ ழும்மினோ பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் கொன்ன விலும்வே லியான் கோடி காவு சேர்மினே. (5). என்பது ஐந்தாம் பாடல். ஒவ்வொரு பாடலில் வினை வவத்தால் தொல்லைப்படும் வாழ்க்கையை எடுத்துக் காட்டி இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுமாயின் கோடிகாவினைச் சென்று சேருமாறு ஆற்றுப்படுத்து கின்றார். கோடிகா இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கஞ்சனூர்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். தலத்து 15. கோடிகா (திருக்கோடி காவல்: நாரசிங்கம் பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. 16. கஞ்சனூர்: நாரசிங்கம் பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. கஞ்சன் (பிரமன்) வழிபட்ட தலம். அக்கினி வழிபட்டதைப் பாசுரம் (அப்பர் 6.90.1) கூறும். ஹரத்தாச்சார்ய சுவாமிகள் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின்மேலமர்ந்து சிவ பரத்வத்தையும் சைவ. சமய மேன்மையையும் நிலை நாட்டிப் பல வடமொழி நூல்கள் அருளிச் செய்த தலம். அப்பர் பாடல்கள் மட்டிலும் பெற்ற தலம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/125&oldid=855966" இலிருந்து மீள்விக்கப்பட்டது