பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 翻器 இறைவனை வழிபட்டு (பதிகம் இல்லை) மாந்துறை : வருகின்றார் (பதிகம் பாடவில்லை). இது முதல் முறை வருகை புரிந்தது. இறைவனை வழுத்தி மங்கலக்குடி' வருகின்றார். சீரினார் மணியும் (2.10) என்ற முதற் குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார், கருங்கை யானையின் ஈருளி போர்த்திடு கள்வனார் மருங்கெ லாமண மார்பொ ழில்சூழ் மங்கலக்குடி அரும்பு சேர்மலர்க் கொன்றை யினானடி அன்பொடு விரும்பி யேத்தவல் லார்வின்ை யாயின வீடுமே. (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடல். மங்கலக்குடி ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு வியலூர் வருகின்றார். குரவங்கமழ் (1.13) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இத்தலத் திறைவனைச் சேவிக்கின்றார். அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில் மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம் 17. மாந்துறை (வடகரை மாந்துறை) : இலால்குடி யிலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 18. மங்கலக்குடி (சூரியனார் கோயில்): ஆடுதுறை யிலிருந்து 1; கல் தொலைவு. சூரியன், பிரமன், காளி, அகத்திய முனிவர் வழிபட்ட தலம் (அப்பர் 5.73:3). 19. வியலூர் : கும்பகோணம் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 4 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/126&oldid=855967" இலிருந்து மீள்விக்கப்பட்டது