பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 33. இன்னம்பர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வடகுரங்காடு துறை” வருகின்றார். கோங்கமே குரவமே' {3, 91) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். கறியு மாமிளகொடு கதவியின் பழங்களும் கலந்துதுக்தி எறியு மாகாவிரி வடகரை யடைகுரங் காடுதுறை மறியு லாங்கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக் குறியி னாரவர் மிகக்கூடுவார் - நீடுவா னுலகி னுரடே, (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். இதில் ஏழாவது பாடல் காணப்பெறவில்லை. . வடகுரங்காடுதுறை ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு பழனம்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வேதமோதி: (t. 67) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். வேதமோதி வெண்ணுரல்பூண்டு வெள்ளை யெருதேறிப் - பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் 22. குரங்காடுதுறை (வட): அய்யம்பேட்டை இருப் பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. வாலி பூசித்ததை 3. ஒ1: 6, 3.91: 8 என்ற பாசுரங்கள் கூறும். பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 23. பழனம்: தஞ்சையிலிருந்து 10 கல் தொலைவு. சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. காவிரிக் கரையிலுள்ளது. ஐயாற்றிலிருந்து இத்தலம் போகும் வழியில் அப்பூதியடிகள் தொண்டு செய்த திங்களுர் உள்ளது. - . • . சம்பந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/128&oldid=855969" இலிருந்து மீள்விக்கப்பட்டது