பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 87 நெய்த்தானத்து இ ைற வ ணி ட ம் விடைபெற்றுக் கொண்டு மழபாடி' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். மூன்று திருப்பதிகங்களால் மழபாடி மாணிக்கத்தைச் சேவிக்கின்றார். அங்கை யாழல் (3.48) என்ற முதற் குறிப்புடையது ஒரு பதிகம். இதில், டிே னாருலகுக் குயிராய் கின்றான் ஆடி னாரெரி கானிடை மாகடம் பாடி னாளிசை மாமழ பாடியை நாடி னார்க்கில்லை கல்குர வானவே. (6) என்பது ஆறாம் பாடல். அடுத்த பதிகம் களையும் வல்வினை (2.9) என்ற முதற்குறிப்புடையது. காச்சிலாத பொன்னோக்கும் கனவயி ரத்திரள் ஆச்சிலாத பளிங்கின னஞ்சுமுன் னாடினான் பேச்சினா லுமக்காவதென் பேதைகாள்! பேணுமின் வாச்சமாளிகைச்சூழ் மழபாடியை வாழ்த்துமே. - (2) 28. மழபாடி (திருமழுவாடி): விருத்தாசலம்-திருச்சி இருப்பூர்தி வழியில் புள்ளம்பாடி என்ற நிலையத்திலிருந்து 10 கல் தொலைவு; திருவையாற்றிலிருந்து 4 கல் தொலைவு. (கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும்). திருமால் வழி பட்டதை 3.28:1 என்ற பாசுரம் கூறும். பங்குனி உத்தரத்தில் திருநந்திதேவர் திருக்கல்யாணத்தைத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பன் எழுந்தருளி வந்து நடத்தி வைக்கின்றார். திருநந்திதேவரும் அவரது தேவி யாரும் வெட்டிவேர்ச் சிவிகையில் முன் செல்லப் பின்னணி யில் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/130&oldid=855972" இலிருந்து மீள்விக்கப்பட்டது