பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 8% கானூர் மேய கண்ணுதலப்பனிடம் விடை பெற்றுக் கொண்டு அன்பிலாலந்துறை' என்ற திருத்தலம் அடை கின்றார். கணை நீ டெரிமால் (1.33) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். பிறையும் அரவும் உறவைத்த முடிமேல் கறையுண் .ெழுவன்னியும் மன்னு சடையார் மறையும் பலவேதிய ரோத ஒலிசென்(று) அறையும் புனலன்பி லாலந்துறை யாரே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காம் திருப்பாடல். அன்பிலாவந்துறையாரிடம் விடைபெற்றுக் கொண்டு மாந்துறை வருகின்றார். செம்பொனார்தரு’ (2.110) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை புனைந்து மாந்துறை இறைவனை ஏத்துகின்றார். பெருகு சந்தனம் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப் பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப் 30. அன்பிலாலந்துறை (அன்பில்): இலால்குடி இருப் பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. கொள்ளிடக் கரையிலுள்ள திருத்தலம். ஆற்றைக் கடந்தால் கோயிலடியிலுள்ள அப்பக்குடத்தான் சந்நிதி என்ற வைணவ திவ்விய தேசத்தையடையலாம். 1966செப்டம்பரில் என் இளைய மகன் இராமகிருஷ்ணனுடன் {அப்போது காரைக்குடியில் 3 ஆம் படிவம் வகுப்பி லிருந்தவன்; இப்போது அக்டோபர் 1985. M. D. படித்து கேரளா பந்தளத்தில் நாயர் கழக மருத்துவமனையில் தலைமை மருத்துவனாகப் பணியாற்றி வருபவன்) அன்பில் பெருமானையும் அப்பக்குடத்தானையும் சேவித்தேன். 31. மாந்துறை (வடகரை மாந்துறை): 17 ஆம் அடிக் குறிப்பு காண்க. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/132&oldid=855974" இலிருந்து மீள்விக்கப்பட்டது