பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 119 என்பது ஆறாவது பாடல். இங்கும் சில நாட்கள் தங்கி மணிகண்டரை வழிபடுகின்றார். வலஞ்சுழியில் பிள்ளையார் தங்கினது முதுவேனில் பருவத்தில்.? திருவலஞ்சுழி மணிகண்டப் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு பழையாறை மேற்றளி, சத்திமுற்றம்" தலங்கட்கு வந்து அந்தந்தத் தலத்து இறைவர்களை வழி படுகின்றார் (இரண்டிலும் பதிகங்கள் இல்லை). சத்திமுற்றப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பட்டிச்சரம்' கோயிலை வணங்கும் பெருவிருப்புடன் வருகின்றார். முதுவேனில் வெப்பம் தாங்க முடியாத நிலை: இறைவனருள் கிடைக்கின்றது. முத்துப்பந்தர் பெறுதல்: சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று சம்பந்தர் பெருமான் முடிமீது முத்துப் பந்தரினைப் பிடித்து எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்புகின்றன. வெயில் வெப்பம் தணிப்பதற்கு இந்த ஏற்பாட்டினைச் செய்கின்றார் பட்டிச்சரத்தீசர். அவ்வானொலியும் முத்துப்பந்தரும் 7. பெ. பு: ஞான சம்பந், 382-389. காண்க. 8. பழையாறை மேற்றளி என்பது சோழர் பேரூர். இது வைப்புத்தலம். 9. சத்திமுற்றம் (சத்திமுத்தம்): தஞ்சை-மயிலாடு துறை இருப்பூர்தி வழியில் தாராசுரம் என்ற நிலையத் திலிருந்து 2 கல் தொலைவு. சத்தி சிவத்தை முத்தமிட்ட தலம். இத்தலத்தில் அப்பர் பெருமான் திருவடி தீட்சைக்கு விண்ணப்பித்தார்; அது நல்லூரில் கிடைத்தது. அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 10. பட்டிச்சரம்: தாராசுரம் என்ற இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தருக்கு முத்துப்பந்தர் கொடுத்த தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/162&oldid=856007" இலிருந்து மீள்விக்கப்பட்டது