பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஞானசம்பந்தர் விண்ணில் தோன்றக் கண்ட பிள்ளையார், இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக் கொள்ளத் தகுவதே என்று கருதுகின்றார்; நிலமிசைப் பணிகின்றார். விண்ணிலிருந்து இழியும் முத்துப் பந்தரினை அடியார்கள் கைக்கொண்டு அதனை விரித்துப் பிடிக்கின்றனர். ஞானசம்பந்தரும் அவ்வழகிய பந்தரின் நிழலை ஈசன் அடியிணை நீழலெனக் கருதி இனிதமர்ந்து அடியார்கள் புடைசூழத் திருக்கோயிலை அடைகின்றார். தமக்கு இனிய நிழல் தந்துதவிய இறைவனை பாடல் மறை' (3.73) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை புனைந்து சேவிக்கின்றார். மருவமுழ வதிரமழபாடிமலி மத்தவிழ வார்க்க அரையார் பருவமழை பண்கவர்செய் பட்டிசர் மேயபடர் புன்ச டையினான் வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடை யினான் உருவமெரி கழல்கள்தொழவுள்ளமுடை யாரை யடையா வினைகளே. - (5) என்பது இப்பாமாலையின் தமிழ் மணம் கமழும் ஐந்தாவது நறுமலர். - திருப்பட்டிச்சரத்திறைவனிடம் வி ை ட ெ ப ற் றுக் கொண்டு பழையாறை வடதளி: வருகின்றார். இறைவனை இறைஞ்சுகின்றார் (பதிகம் இல்லை). பழையாறைப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கருக்குடி' 11. பழையாறை வடதளி: தாராசுரம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. அமர்நீதி நாயனார் வாழ்ந்த தலம். அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். • . 12. கருக்குடி (மருதாந்த நல்லூர்): கும்பகோணத் திலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். z

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/163&oldid=856008" இலிருந்து மீள்விக்கப்பட்டது