பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 12} என்ற தலத்திற்கு வருகின்றனர். கனவிலும் 13:21) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். ஊனுடைப் பிறவியை யறுக்க உன்னுவீர் கானிடை யாடலான் பயில்க ருக்குடிக் கோனுயிர்கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். கருக்குடிப் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு இரும்பூளை' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ஊரை விழாக்கோலம் பூணச் செய்து, பூரணகும்பத்துடன் திருத்தொண்டர் குழாம் எதிரேற்று வரவேற்கின்றனர். முத்துச் சிவிகையினின்று கீழிறங்கி அண்டர்பிரான் திருக் கோயிலை அடைகின்றார். சீரார் கழலே (2. 36) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் பரமனை வழி படுகின்றார். இதில், கற்றார்ந் தடியே தொழுவீர் இதுசொல்லீர் கற்றாழ் குழல்கங்கை யொடுமுட னாகி எற்றே இரும்பூளை இடங்கொண்ட ஈசன் புற்றாடரவோ டென்பு பூண்ட பொருளே, (5) என்பது ஐந்தாவது பாடல். இரும்பூளை இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு அரதைப் பெரும்பாழி* வருகின்றார். பைத்தபாம் போடரைக்" 13. இரும்பூளை (ஆலங்குடி): நீடாமங்கலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. இங்கு தட்சிணா மூர்த்தி சந்நிதி பெரும் புகழ்பெற்றது. வியாழன் அன்று வழிபாடு சிறப்புடையது. தட்சிணாமூர்த்தியே திருத்தேரில் எழுந்து அருள்வார். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். . - - 14. அரதைப் பெரும்பாழி: (அரித்வார மங்கலம்) கோயில் வெண்ணி என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/164&oldid=856009" இலிருந்து மீள்விக்கப்பட்டது