பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஞானசம்பந்தர் (3.30) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். புற்றர வம்புலித் தோலரைக் கோவணம் தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு சுற்றமர் பாரிடங் தொல்கொடி யின்மிசைப் பெற்றர் கோயில் அரதைப்பெரும் பாழியே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். அாதைப் பெரும்பாழி அண்ணலிடம் விடைபெற்றுக் கொண்டு திருச்சேறை வருகின்றார். இத்தலத்து எம்பெருமான்மீது முறியுறு நிறமல்கு' (3. 86) என்ற முதற். குறிப்புடைய செந்தமிழ் மாலை தொடுத்து வணங்கு கின்றார். - - அக்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவில் மக்தர வரிசிலை யதனிடை பரவரி வாளியால் வெந்தழி தரவெய்த விடலயர் விடமணி மிடறினர் செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளககர் சேறையே, - (5) என்பது இத்திருமாலையின் ஐந்தாவது தமிழ் மணங்கமழும் நறுமலர், - 4 கல் தொலைவு. வராக அவதார மூர்த்தியின் கொம்பை முறித்துச் சிவபெருமான் தமது அணிகலன்களுள் ஒன்றாக்கிய தலம், சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 15. சேறை (உடையார் கோயில்): கும்பகோணத்தி லிருந்து 8 கல் தொலைவு. பேருந்து வழியில் உள்ளது. இங்கு சாரநாதப் பெருமாள் கோயிலும் உள்ளது. இந்த சாரநாதப் பெருமாளை வழிபட வந்தபோது (1968) இத் திருக்கோயிலுக்கும் வந்தேன். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/165&oldid=856010" இலிருந்து மீள்விக்கப்பட்டது