பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 123, திருச்சேறைப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு. 'நாலூர் மயானம்' என்ற திருத்தலம் வருகின்றார். :பாலூரு மலைப் பாம்பும் (2. 45) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் LifTLDfr6R08) til freig வழுத்துகின்றார். இம். மாலையில், கண்ணார் நுதலான் கனலா டிடமிகப் பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி கண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை கண்ணா தவரெல்லாம் கண்ணாதார் நன்னெறியே. (6): என்பது தமிழ் மணங்கமழும் ஆறாவது வாடா நறுமலர். இத் திருப்பதிகத்தின் பாடல்தோறும் ஈற்றடியில் ஒரு நல்வாசகத்தை நவின்றுள்ளமை யறிந்து மகிழத் தக்கது. நாலூர் மயானத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு குடவாயில்' என்ற திருத்தலத்தை அணை கின்றார். இரண்டு திருப்பதிகங்களால் வழிபடுகின்றார். அதிகழுந் திருமாலொடு (2. 22) என்ற முதற்குறிப்புடையது முதற் பதிகம். அலைசேர் புனலன் னனலன் னமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் கிலைசேர் பெருங்கோ யில்கிலா பவனே. (6) 16. நாலூர் மயானம்: கும்பகோணத்திலிருந்து 8 கல் தொலைவு. கொடவாசல் பேருந்து வழியில் உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 17. குடவாயில் (கொடவாசல்): தஞ்சை - நாகூர் இருப்பூர்தி வழியில் கொரடாச்சேரி நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்து வழியிலுள்ளது; சம்பந்தர் பாடல்: மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/166&oldid=856011" இலிருந்து மீள்விக்கப்பட்டது