பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலுப் பெரும் பயணம் (2) | 43 பதிகத்தைப் பாகவோ இறைவனைப் போற்று கின்றார். o மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூத இனப்படை கின்றிசையாடவும் ஆடுவர் அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர் வேத மொடேழிசை பாடுவராழ்கடல் வெண்டிரை யிரைந்துரை கரைபொருது விம்மிகின்றயலே தாத விழ்புன்னை தயங்குமலர்ச் சிறை வண்டறை யெழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இந்தப் பதிகப் பாடல்களில் மடக்கி மடக்கி வரும் சொற்கோவையைப் பலவித தாளங்களில், பற்பல காலப் பிரமாணங்களில், பாடி முடிக்கின்றார். அதன் பின்னர் பெரும்பாணர் அந்தப் பதிகத்தைத் தமது யாழில் அமைத்துப் பாட முயல்கின்றார். யாழ் என்பது இருபத் திரண்டு நரம்பு கொண்ட ஓர் இசைக் கருவி; மெட்டு இல்லாத கருவி. இந்தக் கருவியில் ஒவ்வொரு நரம்பாக இசைக்கேற்ப நரம்புகளை மீட்டித்தான் வாசிக்கமுடியும்! சம்பந்தர் பாடிய முறையில் யாழ்ப்பாணர் இந்தப் புதிய பதிகத்தை வாசிக்க முயன்றபோது அது யாழ் நரம்புகளில் அடங்கவில்லை. அவரது முயற்சிகள் யாவும் பலிக்க வில்லை. இதைக் காணும் பாணரின் சுற்றத்தார்களுக்கு அப்போதுதான் பிள்ளையாரின் இசை ஞானம் புரிகின்றது. பெரும்பாணர் பரிவும், நடுக்கமும், நாணமும் உற்று பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, இந்த யாழைத் தொ ட் டு வாசித்ததனால்தானே இந்த அவமானம் எனக்கு வந்தது?’ என்று சொல்லித் தம் கையிலுள்ள யாழை நிலத்தில் அறைந்து உடைக்க ஓங்கு கின்றார். பிள்ளையார் அதனைத் தடுத்தருளி, யாழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/186&oldid=856033" இலிருந்து மீள்விக்கப்பட்டது