பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 159 கரிய கண்டத்தார் வெளிய வெண்பொடி அணிமார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை இடம்பெறக் காட்டகத்தாடிய வேடத்தர் விரியுமாமலர்ப் பொய்கைசூழ் மதுமலிவிற்குடி வீரட்டம் பிரிவிலாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவருலகத்தே. (3) என்பது மூன்றாவது திருப்பாடல். விற்குடி வீரட்டானத் திறைவரிடம் விடைபெற்றுக் கொண்டு பாடலன் நான்மறை (1.105) என்ற பதிகம் பாடிக் கொண்டு திருவாரூர் எல்லையை அடைகின்றார். இதில், 4. ஆரூர் (திருவாரூர்): திருவாரூர் இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 1 கல் தொலைவு, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது. மூர்த்தி-புற்றிடங் கொண் டார், வன்மீகநாதர், திருமூலட்டான நாதர். பிருதிவி தல மள்கக் கருதுவதுண்டு. தியாகராஜ சுவாமி சந்நிதி புகழ் வாய்ந்தது. மூலட்டானத்தின் பெயர் பூங்கோயில்'. ஆளுக்கோயில் 5 வேலி பரப்புள்ளது. தலமும் மூர்த்திக்கு ஒத்த சிறப்புடையது. ஆரூர் அண்ணல் சுந்தரருக்கு உதவிய செயல்கள் புகழ் வாய்ந்தவை. ஏயர்கோன் கவிக்காமர், காடவர்கோன், கழற்சிங்கர், செருந்துணையார், நமிநந்தி யடிகள், விறல் மிண்டர் முதலிய நாயன்மார்கள் வாழ்க்கை தொடர்புடைய தலம். ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த வரலாறு அற்புதம்: ஏழு திருமுறை களிலும் மிகுதியான பாசுரங்கள் இத்தலத்திற்கே உண்டு. (ஆரூர், கச்சி ஏகம்பம், மறைக்காடு ஆகிய மூன்று தலங் கட்கே ஏழு திருமுறைகளிலும் பதிகங்கள் உண்டு. சீகாழிக்கு மிகுதியான பதிக எண்ணிக்கை 71 இருப்பினும் ஆறாம் திருமுறையில் ஒரு பாசுரம் கூட இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/202&oldid=856051" இலிருந்து மீள்விக்கப்பட்டது