பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 161 ஆரா அன்பினால் வினவித் திருக்கோயில் முன்னுள்ள தேவாசிரிய மண்டபத்தை இறைஞ்சுகின்றார். பூங்கோயிலினுட் புகுந்து புற்றிடங்கொண்ட பெருமா னைப் போற்றி நிலமுறப் பன்முறை பணிகின்றார். அங்கு அரனெறி என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமானைப் பணிந்து மகிழ்கின்றார். பருக்கையானை (2.101) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி பிற திருப்பதிகளின் எல்லையைச் சார்கின்றார். இதில், கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ டுள்ளம்ொன்றி யுள்குவார் உளத்துள்ான் உகந்தவூர் துள்ளிவாளை பாய்வயற். சுரும்புலாவு கெய்தல்வாய் அள்ளல் காரை யாரல்வாரும் அந்தண் ஆரூர் என்பதே. (6) என்பது ஆறு.ாவது பாடல். அடுத்து வலிவலம்' என்ற திருப்பதிக்கு வருகின்றார். இரண்டு பதிகங்களால் இத்தலத்துப் பெருமானைச் சேவிக் கின்றார். ஒல்லையாறி (1.50) என்பது முதற் பதிகம். மெய்யராகிப் பொய்யைக்ேகி வேதனை ய்ைத்துறந்து செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே 6. பெ. பு. ஞானசம்பந், 499. 7. வலிவலம்: மயிலாடுதுறை-காரைக்குடி இருப்பூர்தி வழியில் மாவூர்ரோட்டிலிருந்து 5, கல் தொலைவு. கட்டு மலைக்கோயில்; சுற்றிலும் அகழ். மூவர் பாடலும் இதற்கு உண்டு. . ÷ሶNo o ❖ ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/204&oldid=856053" இலிருந்து மீள்விக்கப்பட்டது