பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 163 தந்தைதனைச் சாடுதலும் சண்டிசன் என்றருளிக் கொந்தணவு மலர் கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. (4) என்பது நான்காம் பாடல். இதில் சண்டேசுவரரின் வரலாற்றுக் குறிப்பு அடங்கியிருப்பதைக் கண்டு மகிழலாம். பின்னர் மீண்டும் திருவாரூரை யடைந்து இறைவனை வனங்கியிருக்கின்றார். பின்னர்த் திருநாவுக்கரசரின் பேரன்பின் திறத்தை நினைந்து திருப்புகலூர் தொழப் புறப்படுகின்றார். ஆரூரின் புறத்தே வருபவர், அத் திருப்பதியை விட்டுப் பிரியமுடியாத நிலையில் அதனையே நோக்கி நிற்கின்றார். பின்னர் யவனமாய்ச் சோடையாய்" (2.79) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிக் கை கூப்பித் தொழுகின்றார். இதில், தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் - கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே! அந்தணாரூர் தொழுதுய்யலா மையல் கொண்டு அஞ்சேல் கெஞ்சே. - (2) என்பது இரண்டாம் பாடல். எல்லாப் பாடல்களும் படித்து அநுபவிக்க வேண்டியவை. - - குண்டையூர் - இங்கிருந்து கல் தொலைவிலுள்ளது. குண்டையூரிலிருந்து திருவாரூர் சுமார் 16 கல் தொலைவு. 9. பெ. பு. ஞானசம்பந். 518.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/206&oldid=856055" இலிருந்து மீள்விக்கப்பட்டது