பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஞானசம்பந்தர் பின்னர் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு திருப்பனையூர்' வருகின்றார். பனையூர்ப் பெருமான்மீது 'அரவச் சடைமேல் (1.37) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், - இடியார் கடல்நஞ் சமுதுண்டு பொடியா டியமேனி வினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே. (4) என்பது கான்காவது பாடல். அடுத்து திருப்புகலூர் வத்தடைந்து நாவுக்கரசர் முருக நாயனார் முதலிய அடியார்கள் சூழ பிள்ளையாரை எதிர் கொண்டழைக் கின்றார். சம்பந்தர் முருக நாயனார் திருமடத்தில் நீலதக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியார்களும் அளவளாவி அமர்ந்திருக்கின்றார். இந்தச் சிறு பயணத்தில் சோழநாட்டு எட்டுத் தலங்களின் சேவை நிறைவு பெற்று விடுகின்றது. X- - அரசருடன் பயணம்: பிள்ளையாரும் அரசரும் சில திருப்பதிகளைச் சேவிக்க எண்ணி புகலூரிலிருந்து புறப்படு கின்றனர். புறப்படுவதற்கு முன் குறி கலந்த இசை (1.2) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையால் புகலூர்ப் பெருமானை வழிபடுகின்றார் அடியார் களுடன். இதில், செய்யமேனி வெளியபொடிப் பூசுவர்சேரும் அடியார்மேல் பையகின்ற வினையாற்றுவர் போற்றிசைத்தென்றும் பணிவாரை 10. பனையூர் மயிலாடுதுறை-காரைக்குடி இருப்பூர்தி வழியில் நன்னிலத்திலிருந்து 1க்கல் தொலைவு. 11. பெ.பு.ஞானசம்பந். 524,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/207&oldid=856056" இலிருந்து மீள்விக்கப்பட்டது