பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு f65 மெய்யகின்ற பெருமானுன்றயும் இடம்என்ப ாருள்பேணிப் பொய்யிலாத மனத்தார்பிரியாது பொருந்தும் புகலூரே. (5) என்பது ஐந்தாவது பாடல். சிறுத்தொண்டரும் நீலதக்கரும் விடைபெற்றுத் தத்தம் ஊருக்குச் செல்கின்றனர். பிள்ளையாரும் நாவுக்கரசரும் புகலூர்ப் பெருமானைத் தொழுது புறப்படும்பொழுது நாவேந்தரைப் பிரிய மன மில்லாத சண்பை வேந்தர் முத்துச் சிவிகைப் பின்வரத் தாமும் நடந்து செல்லுகின்றார். அப்பொழுது நாவேந்தர் காழி வேந்தரை நோக்கி, சிவபெருமான் நுமக்களித்த முத்துச் சிவிகையில் எழுந்தருள்வீராக’ எனப் பணிக் கின்றார். இதனைக் கேட்ட சண்பை வேந்தர் :இறைவன் திருவருள் அவ்வாறாயின், நீiர் செல்லுமிடத்திற்கு அடியேனும் அடியார்களுடன் வரக் கருதுகின்றேன்" என்று கூற, அப்பரும் அதற்கிசைந்து முன்னே செல்லுகின்ற்ார். காழி வேந்தரும் பரிசனங்களும் பின்னே தொடர்கின்றனர். முதலில் அம்பர் மாகாளத்தை அடைகின்றனர். தலத்துப் பெருமானை மூன்று திருப்பதிகங்களால் சேவிக் கின்றார். அடையார் புறம் மூன்றும் (1.83) என்பது முதல் திருப்பதிகம். இதில், 12. அம்பர் மாகாளம் (திருமாளம்) : மயிலாடுதுறை . காரைக்குடி இருப்பூர்தி வழியில் பூந்தோட்டம் என்னும் நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. அம்பன், அம்பரன் என்ற அசுரர்கள் வாழ்ந்த தலம். அவர்கள் பலத்தைக் காளிதேவி அடக்கினாள். அதன் காரணமாக அம்பர் என்றும், காளம் என்ற பாம்பு பூசித்த காரணத்தால் காளம் என்றும் பெயர் பெற்று இரண்டும் சேர்ந்து அம்பர் மாகாளம் ஆயிற்று. இங்கு வைகாசி ஆயிலியத்தன்று சோமயாஜியாகம் என்ற உற்சவம் அரனும் உமையும் புலையன்-புலைச்சி உருவில் யாகசாலைக் கெழுந்தருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/208&oldid=856057" இலிருந்து மீள்விக்கப்பட்டது