பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஞானசம்பந்தர் பண்டாழ் கடல்கஞ்சை உண்டு களிமாந்தி வண்டார் பொழிலம்பர் மாகாளம் மேய விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக் கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. (6) என்பது ஆறாவது பாடல். ‘புல்கு பொன்னிறம் (2103) என்ற முதற்குறிப்புடைய பதிகம் அடுத்தது. இதில், குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடிசேரக் கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்தறிந் தவர்மேய மனங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம் வணங்கும் உள்ளமோ டனையவல் லார்களை வல்வினை அடையாவே. (3) என்பது மூன்றாவது பாடல். இப்பதிகத்தை அடுத்தது பாடியுளார் விடையினர் (3:93) என்ற முதற்குறிப்புடைய பதிகமாகும். . பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவி லார்பால் கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொ டேகும் இரவினர் பகலெரி கானிடை பாடிய வேடர் யூனும் அரவின. சரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளங் தானே. (3) என்பது மூன்றாவது பாடல். அவிர்ப்பாகம் ஏற்கும் முறையில் மிகச் சிறப்பாக நடைபெறு கின்றது. பெரியபுராணத்துள் இது கூறப்பெறவில்லை. காளியேத்தும் அம்பர் மாகாளம் (3.93:6) என்றபடி காளி வழிபட்ட தலம்; சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/209&oldid=856058" இலிருந்து மீள்விக்கப்பட்டது