பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 167 அம்பர் மாகாளத்திறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு அண்மையிலுள்ள அம்பர்ப் பெருந்திருக்கோயில்’’’ வருகின்றார். இங்கே கோச்செங்கணான் &lliou திருவம்பர்ப் பெருங்கோயிலைப் பாடிப் போற்றுகின்றார். இங்குப் பாடிய திருப்பதிகம் எரிதர அனல் கையில் (3.19) என்ற முதற்குறிப்புடையது. இதில், மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் பிறையுனை சடைமுடி பெயர ஆடுவர் அறைபுனல் கிறைவயல் அம்பர் மாநகர் இறைபுனை யெழில்வளர் இடமதென்பரே, (3) என்பது மூன்றாவது பாடல், அடுத்து திருக்கோட்டாறு' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இரண்டு பதிகங்களால் தலத்திறைவனைப் போற்றுகின்றார். கருந்தடங்கண்ணி (2.52) என்பது முதற்குறிப்புடைய முதற்பதிகம். இதில், 13. அம்பர் பெருக் திருக்கோயில் (அம்பல் கோயில்) : பூந்தோட்டத்திலிருந்து 2 கல் தொலைவு. கோச்செங்கட் சோழ நாயனார் எடுப்பித்த எண்தோள் முக்கண் ஈசற்கு எழில் மாடம் எழுபதுள் இதுவும் ஒன்று. செயற்கை யாலான கட்டு மலை மேல், யானை உள் நுழையாதபடிச் சிறு வாயில் வைத்துக் கட்டப்பெறும் இவ்வகைக் கோயிலுக்கு மாடக்கோயில், பெருங் கோயில் என்று பெயர். சோமாசி மாறநாயனார் தமது மறையோர் குலத்திற்கேற்ப நாடோறும் முத்தி வளர்த்து வழிபட்டு முத்தி பெற்ற தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 14. கோட்டாறு : பேரளம்-காரைக்கால் இருப்பூர்தி வழியில் உள்ள பத்தக்குடியிலிருந்து 2 கல் தொலைவு. யானை பூசித்ததை 2.52:2 பாடல் கூறும். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/210&oldid=856060" இலிருந்து மீள்விக்கப்பட்டது