பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஞானசம்பந்தர் அம்பின் கேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக் கொம்பி னேர்துகி லின்கொடி யாடுகோட் டாற்றில் நம்ப னேகட னேக லந்திகழ் * நாதனே என்று காதல் செய்தவர் தம்பின் நேர்ந்தறி யார்தடு மாற்றவல் வினையே. (4) என்பது நான்காவது பாடல். வேதியன் (3:12) என்ற முதற் குறிப்புடையது அடுத்த பதிகம். இதில், - பந்தமரும் விரல்மங்கை கல்லாளொரு பாகமா வெந்தமரும் பொடிப்பூச வல்லவிகிர் தன்மிகும் கொந்தமரும் மலர்ச்சோலை சூழ்ந்ததிருக் கோட்டாற்றுள் அந்தணனை நினைந்தேத்த வல்லார்க்கில்லை அல்லல்ே. (6) என்பது ஆறாவது பாடல். இந்நிலையில் குங்கிவியக் கவிய நாயனார் எதிர் கொண்டு வரவேற்க திருக்கடவூர் வீரட்டத்தை' அடை கின்றார். மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலால் உதைத்த வீரட்டப் பெருமானை, சடையுடையானும் (3.8) என்ற திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். 13. கடவூர் வீரட்டம் : மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்தி வழியில் திருக்கடையூர் என்ற நிலையத்திலிருந்து 4. கல் தொலைவு. மார்க்கண்டன் வரலாறு பெற்ற தலம். அமிர்தகடமே சிவலிங்கமாயிருத்தலின் அமிர்தகடேசுவரர் என்பது இறைவன் திருநாமம்; இறைவி அபிராமி. கால சம்ஹார மூர்த்தி சந்நிதி தெற்கு நோக்கியது. குங்கிலியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/211&oldid=856061" இலிருந்து மீள்விக்கப்பட்டது