பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 169 செவ்வழலாய் நிலனாகி கின்ற சிவ மூர்த்தியும் முவ்வழல்கான் மறையைந்தும் ஆயமுனி கேள்வனும் கவ்வழல்வாய்க் கதகாக மார்த்தான் கடவூர்தனுள் வெவ்வழ லேந்துகை வீரட்டானத் தரனல்லனே. (7) என்பது ஏழாவது பாடல். வீரட்டானப் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு கடவூர் மயானத்திற்கு வருகின்றார் காழிப்பிள்ளையார். “வரிய மறையார் (2.80) என்ற குறிப்புடைய திருப் பதிகத்தைப் பாடிப் போற்றுகின்றார். இதில், வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோடொரு காதிலங்கத் துள்ளு மிளமான் மறியார்சுடர் - பொற் சடைகள் துலங்கக் கலிய நாயனாரும், காரி நாயனாரும் தொண்டு செய்து முத்தி அடைந்த தலம். திருக்களிற்றுப் படியார் இயற்றிய உய்ய வந்த தேவநாயனார் அவதரித்த தலம். அபிராமி பட்டர், அபிராமியந்தாதி பாடி அமாவாசையில் முழு மதியம் காட்டிய அற்புதத் தலம். சித்தின்ரப் பெருவிழாவில் 6ஆம் நாள் கால சம்ஹார உற்சவம் புகழ் பெற்றது. கார்த்திகை சோமவாரம் தோறும் 1008 சங்காபிடேகமும் புகழ் மிக்கது. கால சம்ஹார மூர்த்தியின் அருள் பெறு வதற்கு அன்பர்கள் தம் 60 ஆண்டு நிறைவை இத்தலத்தில் ஆயுள் ஹோமம் முதலியன செய்து கொண்டாடுவதுண்டு. அஷ்ட வீரட்டானங்களுள் இதுவும் ஒன்று. 16. கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) ; திருக் கடையூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. பிரம தேவனை நீறாக்கிய மயானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/212&oldid=856063" இலிருந்து மீள்விக்கப்பட்டது