பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஞானசம்பந்தர் கள்ள குவெண்டலையர் கடவூர் மயான மமர்ந்தார் பிள்ளை மதியமு டையார் அவரெம் பெருமானடிகளே. (5) என்பது ஐந்தாவது பாடல். இதனையடுத்து திருவாக்கூர் வருகின்றார். அக் கிருந்த ஆரமும் (2.42) என்ற திருப்பதிகத்தால் ஆக்கூர் அமர்ந்த இறைவனைச் சேவிக்கின்றார். பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில் விண்னொளிசேர் மாமதியக் தீண்டியகால் வெண்மாடம் தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். ஆக்கூரிலிருந்து திருமீயச்சூர் வருகின்றார். காய்ச்செவ்விக் (2.62) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தால் இறைவனைப் போற்றுகின்றார். இதில், 17. ஆக்கூர்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப் பூர்தி வழியில் ஆக்கூர் நிலையத்திலிருந்து கல் தொலைவு. சிறப்புலி நாயனார் தலம். ஆலயம் பெயர் தான்றோன்றி மாடம் (தான் தோன்றி . சுயம்பு). இத்தலத்து வேளாளர் வள்ளண்மையை (2.42:3) பாசுரம் கூறும். r 18. மீயச்சூர்: மயிலாடுதுறை - காரைக்குடி இருப் பூர்தி வழியில் பேரளம் என்ற நிலையத்திலிருந்து கல் தொலைவு. தேவியார் திருக்கோலம் அமர்ந்த கோலமாய் மிக அழகு நிரம்பியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/213&oldid=856064" இலிருந்து மீள்விக்கப்பட்டது