பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தல வழிபாடு 17; விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் படையார் பூதஞ் சூழப் tiiri– SDIT LsôIrữ பெடையார் வரிவண்டனையும் பிணைசேர் கொன்றையார் விடையார் கடையொன் றுடையார் மீயச் சூராரே. (5) என்பது ஐந்தாவது பாடல். - மீயச்சூர் இறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு பாம்புரம் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். சீரணி திகழ்தரு’ (1.41) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். இதில், ஓதிகன் குணர்வார்க் குணர்வுடை ஒருவர் ஒளிதிகழ் உருவஞ்சேர் ஒருவர் மாதினை இடமா வைத்தளம் வள்ளல் மான்மறி ஏந்திய மைந்தர் ஆதிரி யருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையவென் றெழுந்த பாதிவெண் பிறைசடை வைத்தளம் பரமர் பாம்புர கன்னக ராரே. (6). என்பது ஆறாவது பாடல். பாம்புரத்திலிருந்து திருவிழிமிழலை 29 வருகின்றார். இங்கு பல நாட்கள் தங்குகின்றார். இங்கு பல சிறப்பான 19. பாம்புரம் (திருப்பாம்புரம்) : மயிலாடுதுறை - காரைக்குடி இருப்பூர்தி வழியில் பேரளம் நிலையத்தி லிருந்து 4; கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 20. விழிமிழலை (திருவிழிமிழலை) : மயிலாடுதுறை . காரைக்குடி இருப்பூர்தி வழியில் பூந்தோட்டம் என்ற நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. சக்கராயுதம் பெறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/214&oldid=856065" இலிருந்து மீள்விக்கப்பட்டது