பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. (இதனை அடுத்த கட்டுரையில் வி ரி வாக க் காண்போம்). திருவிழி மிழலையில் தங்கியிருந்த நாட்களில் இரண்டு தலங்களை வழிபடுகின்றார். ஒரு நாள் பேணு பெருந்துறை என்ற தலத்திற்கு வருகின்றார். பைம்மா காகம் (1.42) என்ற முதற் குறிப் புடைய பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். கிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்த்த புண்ணியர் வெண்பொடிப் பூசி கலனொடு தீங்கும் தானல தின்றி கன்கெழு சிந்தைய ராகி மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறை யாரே. . (4) வதற்காகத் திருமால் நாடோறும் இத்தலத் திறைவனை 1000 தாமரை மலர்களைக் கொண்டு அருச்சித்துவர, ஒரு நாள் ஒரு மலர் குறையத் திருமால் தனது கண்ணையே எடுத்து அருச்சனையை முடித்ததை (4.64:8) பாசுரம் கூறும். திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்த விமானமே கோயிலாயிற்று என்பதை (3.119:7) பாசுரம் கூறும். மூலத் தான இலிங்கமூர்த்தியின் பின்புறம் பார்வதி . பரமேசுவரர் திருமணக் கோலம் உள்ளது. பஞ்சம் வந்தபோது அப்பருக்கும், சம்பந்தருக்கும் (அடியார்கட் கமுதளிக்க) இறைவன் படிக்காக அளித்ததை (7.88:8) பாசுரம் கூறும். இக்காசுகளுள் அப்பருக்களித்த காசு சுலபமாக மாறிற்று: சம்பந்தருக்களித்த காசு வாசியுள்ளதாக இருந்து. சம்பந்தர் வாசி தீரவே என்ற பதிகம் பாடிப் பிறகு (1.92) வாசி யிலாக் காசு பெற்றார். 21. பேணு பெருந்துறை (திருப்பந்துறை) : கும்ப கோணத்திலிருந்து 6 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/215&oldid=856068" இலிருந்து மீள்விக்கப்பட்டது